20 நிமிட தனிமை நடை!!

மாலை வேளை,

மழை நேர காற்று,

தனிமை நடை,

மிதந்தது தென்றல் மட்டுமல்ல

என் எண்ணங்களும்!!

எதனை நோக்கி கால்கள் பயணித்ததோ

கால்கள் போன போக்கில் நான்:)

இன்ப நாட்களின் முடிவை எண்ணியோ?

இல்லை,

வரும் காலத்தின் பொறுப்பை எண்ணியோ??

புதுமையான தனிமை!!!

Published in:  on May 12, 2008 at 1:48 pm Leave a Comment
Tags:

Mother’s Day!!

தன் உதிரத்தைக்
கரைத்து நம்மை
உயிர்ப்பித்த
அன்னையின் அடி பணிவோம்!!

Lets enjoy mothers day!!!
Happy mothers day!!

Wonderful word which binds world!!

its ur wish to read it as MOM/WOW…

Published in:  on May 10, 2008 at 6:11 pm Leave a Comment

காம வெறியன்!!


வேலை தேடிச் சென்றேன்

என் சேலையைப் பிடித்தான்

சேலைக்கா வேலை கேட்டேன்??
Published in:  on at 5:06 pm Comments (2)

மகிழ்ச்சி!!

புத்தம் புது வாழ்க்கை

நித்தம் ஒரு மாற்றம்
ஏற்றத்தில் ஓர்  இறக்கம்
இறக்கத்திலும் ஓர் ஏற்றம்!!

மானிட வாழ்க்கை
ஒரு மாயமான வாழ்க்கை
மகத்துவம் உணர்ந்தால் மட்டுமே
மகிழ்ச்சி!!
Published in:  on at 4:54 pm Leave a Comment

ஏ-மாற்றம்!!

னிந்த மாற்றம்

என்றேன்

எல்லாம் ஏமாற்றத்தால்
என்றாள்!!
விலைமாது!!
Published in:  on at 4:37 pm Leave a Comment

கண்டால் கண்களால்

சுவாசிக்கக்

கற்றூக் கொடுக்கிறாய்

காணா விட்டால்

நினைவுளால்

சுவாசிக்கக்

கற்றூக் கொடுக்கிறாய்!!

Published in:  on at 4:23 pm Leave a Comment

சொல்லி வைத்தேன்!!

உனைக் காணத் துடிக்கும்

கண்களீடம் சொல்லி
வைத்தேன்
நீ என்னைக் கடக்கும்
இரு நிமிடம்
இமைக்காமல் இரு என!!
Published in:  on at 4:13 pm Leave a Comment