அத்தை மகள் அவள் எனக்கு... அடடா !! என்ன பாசம் காட்டினாள் கடந்த ஆறு வருடங்களாக!! அடிக்கடி பேசினாள், அன்பை கொட்டினாள், அறிவுரை ௬றினாள், எல்லாம் அறிந்தேதான், அனைவரையும் அதிகமாய் நேசித்தாளோ? அவளின் நினைவுகள் அலைபாய்கின்றன என் மனதில்... ஐயகோ!! கடவுளுக்கு அத்தனை ஆசையா அவள் மீது... இத்துனை சீக்கிரம் அவளை ௬ட்டிக் கொண்டார்... அவள், அத்தைக்கு ஒரே பெண், அவளுக்கோ இரு பெண் பிள்ளைகள்!! ஓர் விவரமும் அறியாத ஒரு வயதுப் பிள்ளை... ஊர் விவரம் அறியாத ஐந்து வயதுப் பிள்ளை... கனி மனதுக்காரி போயே விட்டாள்... குடும்பமே கசிந்து கொண்டிருக்கிறது... அவளின் ஆன்மாவே வழி நடத்த வேண்டும் !!!
Advertisement