RSS

உனக்காகவே!!

22 Jan

childhood love!!

எனக்கு முந்தி் உலகம் கண்டாய்
எனைக் காணத்தான் உன் அன்னையுடன்
வந்தாயோ?

அண்டை வீட்டவள் என
அலட்சியமாயப்் பார்த்தாயா?
இல்லை அத்தை மகள் என
அன்புடன் பார்த்தாயா?

என் அப்பன் உன் மாமனாக
நானும் நீயும் தேர்ந்த மரத்தில
செய்த கட்டிலில் தவ்ழ்ந்தோம்!!

பள்ளி செல்லும் நாளும் வந்தது
வகுப்பறை மட்டும் தனித்துப் போனது!!
புரியாத கண்ணீருடன் கை அசைத்து
விடை பெற்றோம்!!

ஒன்றாம் வகுப்பு போய் ஒன்பதும் ஆனது
ஒன்றாய் நாம் கைகோர்த்தது மாறவில்லை!!
நினைவிருக்கிறதா உனக்கு???
என் கையில் குத்திய முள்ளால்
நீ விரும்பிய ரோஜா செடியை ஒடித்தாய்…

எதிர்த்த வீட்டு மாமியும் அடுத்த வீட்டு பாட்டியும்
எவ்வளவோ சொல்லியும் கேளாமல்,
சைக்கிளின் முன்னால் கம்பியில்
உன்னுடன் பயணிப்பதில் ஆனந்தம்் கண்டேன்!!

குடிசைக்குள் அனுப்பினாள், ஒரு நாள் அம்மா
கூடி விளையாடுவதற்கு தடை விதித்தாள்!!
நான்….சிரு பிள்ளை இல்லையாம் ,அத்தை கூட
சொன்னாள…் இனி,வீதிக்குச் செல்லாதே என்று!!

அதை அறியாமல் டூ விட்டாய் நீ
டூரிங் டாக்கீஸ் படத்திற்கு உன்னுடன் வரவில்லை என…

பள்ளிப் பருவம் முடிய நீ
பட்டப் படிப்பு படிக்க போயிட்ட
பொம்பள புள்ளக்கு படிப்பெதுக்குன்னு
தாத்தா சொல்ல, எங்கப்பன் என்ன
காட்டு வேலைக்கு அனுப்பிட்டாரு…

கடிதாசி அனுப்பி காலம் போச்சு,
காலைல ஒரு நாள் காரு வண்டியில
வந்த உன்னை பார்க்க…கடத்தெருவுக்கு
போரேனு ஆத்தாட்ட சொல்லிட்டு வந்தேன்!!்

கன்னத்தக் கிள்ளி கருத்திட்டயே புள்ளனு சொல்லி,
ஆனந்தக் கண்ணீரில் நீ அழ உன் கண்ணீரில்,
நான் ஆனந்தம் கண்டேன்!!
என்ன மாமா இன்னுமா உனக்கு என்ன பிடிக்கும்????
எவ்வளவோ அழகுப் புள்ளகள பாத்துருப்ப நீ ம்ம்??

போடி போடீ…….பொக்கிஷமா நினைக்ரேன் உன்ன நான்..
ஏன்டி இப்படி பேசி என் மனச பொசுக்குற??
…………
…………
ஊரே உன்ன பாக்க வர ஓரமா ஒதுங்கி ஒடுங்கி போனேன்..
சிறுவயதில் கைகோர்த்து சிட்டாய் பறந்த நாம
இப்படி திசை மாரி சிதறிப் போனேமே!!
பெரியத்தான் வந்துட்டாருனு பெருசா சிலுப்பிகிட்டா
பெரியூர் பட்டிணக்காரி,
பெருசா குடுக்க உனக்குன்னு எங்கிட்ட என் உசிர
தவிர ஏதுமில்லயே!!

காகிதத்துல உம் பேருக்குப் பக்கத்துல எம் பேர எழுதி ,
உம் பக்கத்துல நான் ஒட்கார நாள் என்னக்கி வருமோ??
உலக விஷயத்த எல்லாம் நீ சொல்லி கேட்கனும் ,
உன் கைய புடிச்சு ஊரெல்லாம் சுத்தனும்!!

ஓரமா ஒரு பயம் உனக்கு நான் பொருத்தமான்னு…
ஓயாம பாட்டி சொல்லுவா உன்ன ஒரு ராஜகுமாரன்னு…
கருமை பூசிய விழுயோரம் கண்ணீரும் எட்டிப் பார்க்க
காரணமே புரியாம என்னப் பார்த்த நீ …

மாமா நீ வேணும்னு சொல்ல மனசுக்குள்ள ஆயிரம் ஆசை
ஆனாலும் அத மறைச்சு நான் நகர எத்தனிக்க…
ஒரு நிமிஷம் புள்ளனு சொல்லி,
பாதகமான குறைன்னு எங்கிட்ட நான் நினைச்சத… நீ
சாதகமான நிறைகளா சொல்லி என் கைய புடிச்ச!!

நீ இன்னும் மாறவே இல்ல மாமான்னு சொல்லி
உன்னைச் சரணடந்தேன் நான்!!!

Advertisements
 
5 Comments

Posted by on January 22, 2009 in poetry

 

5 responses to “உனக்காகவே!!

 1. Krithika

  January 23, 2009 at 3:59 AM

  hey.. really rocking 🙂 a good step towards moving ahead!!!
  Keep rocking !! One small and humble suggestion .. try to use the same slang(either pure tamil or the village slang) .. through out the poem.. that may add to its beauty…

   
 2. Shanmugapriya

  January 28, 2009 at 8:38 AM

  thanks keerthi!!keeping in mind that she leart till school life i wrote those lines in pure tamil till that stage and the rest in village slang bcos she stopped her studies!!Thanks for ur suggestion. .adutha release la amul paduthidalam;)

   
 3. Dinesh

  August 5, 2009 at 7:22 AM

  Priya,

  I would have preferred you writing entire poem in slangs. Ava padikkalangarathu.. slangla puriyum… Do not give intelectual reasoning for the reader. The reader might slip over this change in style-mid of the poem. I slipped a second and re-read that para again.

  Loved the Slang portion much.!!! Thanks for the poem.. keep writing…

   
 4. Muthu Kumar

  August 31, 2009 at 2:47 PM

  ஹாய் ஷண்முக பிரியா,
  நான் பவானி அண்ணன் முத்து குமார்.
  பழைய மெயில் ஒன்ன செர்ச் பண்ணும் போது ஒன்னோட ப்ளாக் லிங்க் பாத்தேன். போன வருஷம் எனக்கு அனுப்பியதாக ஞாபகம். சும்மா கிளிக் பண்ணி பாத்தா ரொம்ப ஆச்சர்யம். அருமையான கவிதைகள். உரைநடை போல தோன்றியாலும் அருமையான வார்த்தை கோர்வைகள். மற்ற கவிதைகளையும் படித்தேன். தமிழ் என்றால் பாவக்காயை கடித்தது போல முழிக்கும் பவானி தோழியிடம் இத்துணை தமிழார்வமா!! அருமை!!
  Dont tell her 🙂 enna konnuduvaa…
  Good writings…Keep blogging..All the best from your anna…Muthu….

   
 5. Shanmugapriya

  September 5, 2009 at 2:29 AM

  Hi Anna,

  Am really surprised and so happy to see the comments.Thanks much for your valued comment.

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: